படிங்க! சிரிங்க! (நகைச்சுவை)

ஒரு கடை வாசலில் போர்டு வசனம்...

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது...

" என்னப்பா பஸ் ஓடும் போது
அந்த ஆளு டிரைவர்கிட்ட
போய் கலாட்டா பண்ணறாரு?"

"அது ஒன்னுமில்லீங்க
ஹோட்டல்ல சாப்டுட்டு
காசு இல்லைனா
அந்த ஆளு
மாவாட்டி கொடுத்துட்டு
வந்துருவாராம்...
இப்ப டிக்கட் எடுக்கலையாம்
காசு ...இல்லையாம்...!
கொஞ்ச நேரம்
பஸ்ஸை ஓட்டிக்கறன்னு
டிரைவர்கிட்ட
தகறாரு பண்ணறாரு...! ..........அதான்"

 "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."


"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"


Previous
Next Post »

2 Comments

Click here for Comments
11/10/2013 09:12:00 முற்பகல் ×

முதல் 2 நகைச்சுவை அருமை...தொடருங்கள்..

Reply
avatar
பெயரில்லா
admin
2/05/2014 07:31:00 முற்பகல் ×

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Reply
avatar