மறக்கமுடியாத ஜோக்ஸ்!

"என்னைய்யா மேடைல மைக் குக்கு பதிலா செல் போன் வச்சுருக்கு ..?"

"மாநாட்டுல கூட்டமே இல்லை..இருக்கற 2-3 பேர் கூட கான்ப்பரன்ஸ் கால் பேசுங்க போதும்..."

_____________________________________________________________________________________

காக்கா கா கான்னு கத்தறதால அதுக்கு காக்கான்னு பேரு வந்துதா, இல்லை அதுக்கு காக்கான்னு பேர் இருக்கறதால அது கா கான்னு கத்தறதா, இந்தக் கேள்வியை நான் கேட்டா ஏன் எல்லாரும் என்னை வெறிச்சு பார்த்துட்டு தெறிச்சு ஓடறாங்க. நான் அறிவாளி ஆகறது யாருக்குமே பிடிக்கலை போல.

_____________________________________________________________________________________

இட்லி பூ மாதிரி இருக்கு சார்… கொண்டு வரவா..?

அப்படியா! அப்படின்னா 5 முழம் இட்லி கொண்டு வாப்பா..!

_____________________________________________________________________________________

ரமனன் : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ? 

சர்வர் : ஏன் அக்கறையா கேட்கறீங்க ? 

ரமனன் : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.

_____________________________________________________________________________________

எப்பவும் 8 மார்க், 9 மார்க்தான் வாங்குறே…
ஆனாலும் உங்க அப்பாகிட்டே ஈசியா
கையெழுத்து வாங்கிட்டு வர்றியே… எப்படி?

கண்ணாடி போடாதப்ப எங்க அப்பாவுக்கு
எல்லாம் ரெட்டை ரெட்டையா தெரியும்டா..!
Previous
Next Post »

3 Comments

Click here for Comments
10/20/2013 04:40:00 பிற்பகல் ×

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
குறிப்பாக கடைசி
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Reply
avatar
10/20/2013 06:03:00 பிற்பகல் ×

ரசிக்கும்படியான நகைச்சுவைகள்...

பகிர்வுக்கு நன்றி

Reply
avatar
10/20/2013 06:26:00 பிற்பகல் ×

முதலில் உள்ளது கடைசியில் உள்ளது மிக அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்

Reply
avatar